புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 மே 2022 (22:02 IST)

பாரதிய ஜனதா கட்சியின் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

bjp
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட அலுவலகத்தில், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்  V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு கே. அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று  ஆலோசனைகள் வழங்கினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம். கோபிநாத், நவீன் குமார், ராஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜாளி செல்வம், ராமநாதன் பிள்ளை, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன், மாவட்ட மகளிரணி தலைவி மேனகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.