1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 மே 2025 (16:08 IST)

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

Street Dogs

மீஞ்சூர் பகுதியில் கடந்த 2 நாட்களில் தெரு நாய்கள் கடித்ததால் 10 பேர் காயம் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதுமே தெருநாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ள நிலையில், இரவு, பகல் பாராமல் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்தி செல்வதும், கடிப்பதும் தினசரி செய்திகளாகி வருகிறது. தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளும் போதிய பலனளித்தனவா என்ற கேள்வி ஒருபக்கம் உள்ளது.

 

மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் அண்மை காலமாக தெருநாய் கடிகள் அதிகமாகியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 10 பேர் நாய்களால் கடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நாய் கடித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரத் என்ற சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

நாள்தோறும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும், ஆள் நடமாட்டமில்லா இடங்களில் செல்லவுமே அஞ்ச வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்துள்ள மக்கள். தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு உடனடியான நடவடிக்கைகளை, செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Edit by Prasanth.K