இதுக்கே இப்படியா? இன்னும் எடிட் பண்ணிய காட்சிகளையெல்லாம் விடப்போறோம்: மெர்சல் எடிட்டர்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற இரண்டே இரண்டு வசனங்களுக்கு பாஜகவினர் இந்த அளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களே, இன்னும் படத்தில் நீளம் கருதி சில காட்சிகளை குறைத்துள்ளோம், அதையெல்லாம் வெளியிட்டால் என்ன ஆகும் தெரியுமா? என்று 'மெர்சல்' பட எடிட்டர் ரூபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'மெர்சல்' படத்தில் இன்னும் மெர்சலான பல காட்சிகள் இருப்பதாகவும், படத்தின் நீளம் கருதி அவற்றை எடிட் செய்துவிட்டதாக கூறிய ரூபன் அந்த காட்சிகளை விரைவில் இணையதளங்களில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை எடிட் செய்யும்போது இந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளாகும் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை' என்று கூறியுள்ளார்
மேலும் 'மெர்சல்' படத்திற்கு நான் தான் எடிட்டர். நான் கஷ்டப்பட்டு படித்து, அனுபவம் பெற்று இந்த வேலைக்கு வந்துள்ளேன். வேறு யாரும் இந்த படத்தில் உள்ள காட்சிகளை எடிட் செய்ய அனுமதிக்க மாட்டேன்' என்றும் அந்த பேட்டியில் ரூபன் கூறியுள்ளார்.