1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (10:49 IST)

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக ஆலோசனை..! வடசென்னை தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..!

dmk alosonai
மக்களவைத் தேர்தலையொட்டி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர்  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை சென்னையில்  நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு,  சேலம், தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், தஞ்சாவூர்,  வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் இதுவரை ஆலோசனை  நடத்தியுள்ளனர்.
 
இந்நிலையில்  ஒன்பதாவது நாளான இன்று வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 
வடசென்னை மற்றும் தென் சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.