செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 மே 2021 (11:58 IST)

என் தம்பி முதலமைச்சராவதில் பெருமை - மு.க.அழகிரி

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 7ம் தேதி ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
 
இந்நிலையில் தற்போது  என் தம்பி முதலமைச்சராவதில் எனக்கு பெருமை என முக அழகிரி கூறியுள்ளார். மேலும், முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார்.