1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (18:52 IST)

சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!

சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!

தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.


 
 
இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார், ஆனால் இதில் திருப்தியடையாத எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சருக்கு பழமொழி ஒன்றை கூறி பதில் அளித்தார்.
 
அப்போது பேசிய அவர், 3 மாதங்களாக பாமாயில் இல்லை. 2 மாதங்களாக பருப்பு வகைகள் கிடையாது. ஆனால், எல்லாவற்றையும் வாங்கியாயிற்று, வாங்கியாயிற்று, என்று சொல்கிறீர்கள். ஆர்டர் கொடுத்தாயிற்று, என்று சொல்கிறீர்கள். ஒரு பழமொழி, சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா, என்று சொல்வார்கள். அதுபோல இங்கு அமைச்சர் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.