1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin says this is the victory for democracy

திமுகவின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி: மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முத்தை தோற்கடித்து 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. வேலூர் தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி திமுக வென்றுள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
”பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும்”.. மோடிக்கு சினிமா சங்கம் கோரிக்கை