வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (08:37 IST)

7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது இந்த மாவட்டங்களுடன் புதுக்கோட்டை பெரம்பலூர் தூத்துக்குடி திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.