வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:09 IST)

இடி இடித்ததில் உருவான நீர் வீழ்ச்சி ;இரவோடு இரவாக நடந்த அதிசயம்..

பெரம்பலூரில் நீர் இடி விழுந்ததால் அங்குள்ள பச்சை மலை பகுதியில் ஒரு புதிய அருவி உருவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென பெரும் சத்தத்துடன் நீர் இடி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மலை பாறைகள் பிளந்து அங்கு ஒரு புதிய நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த அதிசயத்தை கண்டு மலைத்துப் போனார்கள். நீர் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று உருவாகி புதிய அருவி ஒன்று உருவாகியுள்ளது அதிசயமாக பார்க்கப்பட்டாலும் இது இயற்கையான் செயல் தான் என்பது மேலும் வியப்பை ஏற்படுத்துகிறது.