ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசு கேவியட் மனு

court
Last Modified வியாழன், 31 மே 2018 (11:44 IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவைக் கேட்காமல், எந்த உத்தவையும் இடக்கூடாது என தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை வித்தித்தது. இருப்பினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கைகள் வைத்தனர். 
issue
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என இன்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 29-ந் தேதி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். இதனையடுத்து  ஸ்டெர்லைட் ஆலை 2 வது யூனிட் விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது.
seal
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், தமிழக அரசின் சார்பில் தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி ஒருவேளை ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலைக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தால், தமிழக அரசைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :