வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (13:32 IST)

அன்புமணி இல்ல சூட்கேஸ்மணி: பாமகவை போட்டுத்தாக்கும் ஸ்டாலின்!!!

கோட்பாடுகளை மீறி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் பாமகவிற்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஸ்டாலின் மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி என முழக்கமிட்டவர்கள் இனி மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ்மணி என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும். அதிமுக - பாமக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி, ஒரு பண நலக்கூட்டணி என காட்டமாக பேசினார்.