செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (07:56 IST)

ஸ்டாலின் காரை மறித்த மதுரை திமுகவினர் – ஏன் தெரியுமா ?

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு கலந்து கொள்வதற்காக சென்ற திமுக தலைவர் ஸ்டாலினின் காரை திமுகவினர் மறித்துள்ளனர்.

நேற்று மதுரைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒரு கட்டமாக கிறிஸ்துவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காரில் சென்ற போது. அவரது காரை திமுகவினர் வழிமறித்தனர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காத உறுப்பினர்கள் சிலர் தலைமைக்கு செய்தியைக் கொண்டு செல்லும் விதமாக இவ்வாறு நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அங்கு சிறிது நேரம் ஆன பின் கார் புறப்பட கற்பகம் நகரருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் கோஷங்கள் மற்றும் கொடிபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.