ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (19:55 IST)

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்! – போலீஸில் புகார்!

முன்னால் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்தார். கடந்த மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் கம்பீர் எம்.பியாக பதவியேற்றார்.

இந்நிலையில் சர்வதேச எண்ணிலிருந்து கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து சாதாரா மாவட்ட காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள கவுதம் கம்பீர் ‘கொலை மிரட்டல்கள் விடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிக்க கோரியும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு வலியுறுத்தியும் உள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் சர்வதேச எண்ணை வைத்து மிரட்டல் விடுக்கும் நபரை கண்டறிய விசாரணையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.