புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (17:00 IST)

ஸ்டாலினுக்கு சவால் விட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!!

பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இதற்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
ஸ்டாலின் நலத்திட்டங்களை எதிர்ப்பவராகவே உள்ளார். அவருக்கு நெஞ்சுரம் இருந்தால் 39 எம்பிக்களை ராஜினாமா செய்யச் சொல்வாரா ஸ்டாலின்? என சவால் விட்டுள்ளார்.
 
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை சந்திக்காமல் போராட்டம் நடத்துகிறது திமுக . ஸ்டாலின் போராட்டம் பேரணி என செல்வதால் சொந்த காசை செலவழித்து வேட்பாளர்கள் தவித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.