1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (07:44 IST)

தேமுதிகவின் 2009 கூட்டணியும், 2019 கூட்டணியும்:

அதிமுக, திமுக என இரண்டு கட்சிகள் மட்டும் தமிழகத்தை மாறி மாறி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக இருப்பார் என மக்கள் மனதில் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தவர் விஜயகாந்த்
 
2005ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த நிலையில் அடுத்த ஆண்டே தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த விஜயகாந்த் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றது.அதேபோல் கடந்த 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு நல்ல ச்தவிகிதத்தை பெற்றது
 
ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே தேமுதிகவின் இமேஜ் இறங்குமுகமாக மாறியது. அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் மக்கள் நம்பிக்கையை இழந்ததால் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்து வாக்கு சதவிகிதத்தையும் இழந்தது
 
தற்போது 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசி தேமுதிக தனது மதிப்பையும் மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டதால் வரும் தேர்தலுக்கு பின் தேமுதிக என்ற கட்சியே காணாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.