செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:56 IST)

கொஞ்ச நாளைக்கு சினிமாவுக்கு நோ…. ஒய்வு எடுக்கும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படமா வெற்றிப்படமா அல்லது தோல்விப் படமா என்று தெரியாத சூழலே உள்ளது.

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனத்தால் விதந்தோதப்படுகிறது. ஆனால் விமர்சன ரீதியாக மோசமான கருத்துகளைப் பெற்றது. இந்நிலையில் ரஜினி அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என ஆர்வமாக இளம் இயக்குனர்களிடம் கதைக் கேட்டார்.

ஆனால் இப்போது ரஜினி கொஞ்ச நாளைக்கு சினிமா பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் சமீபத்தில் அவரின் மகளின் விவாகரத்து சம்மந்தமாக வந்த செய்திதான் என்றும் சொல்லப்படுகிறது.