வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (14:59 IST)

நெல்லையில் மொபைல் கடையில் இருவருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் செயல்படும் தனியார் மொபைல் கடை ஊழியர்களுக்கும், கடையின் மேலாளருக்கும் இடையே பணியின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று விடுப்பில் இருந்த மேலாளர் செல்வம் கடைக்கு வந்து,  கடையில் இருக்கும் பணியாளர்கள் மைதீன் மற்றும் பஷீர் இருவரையும் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார். 
 
 இருவரும் பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரிவாளைக் கொண்டு வெட்டிய செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர்