SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம்
பொங்கல்- திருவிழா - 2019
எஸ் ஆர் எம் மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த கல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில் மிகச்சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர் பயன்பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய பண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுகிறது.
11.01.2019 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில் SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.. தென் கொரியாவின் HANAM பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த 12 மாணாக்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களையும் இன்முகத்துடன் வரவேற்றனர்.
SRM சிக்கிமிலிருந்து வந்திருந்த 20 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் மிக சிறப்பாக வரவேற்றனர்.
தென் கொரியா மற்றும் சிக்கிம் மாணவர்கள் நம் பாரம்பரியமிக்க பொங்கல் விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். இந்தியாவின் பழம் பெரும் பண்டிகையான பொங்கல் விழாவின் மூலம் நமது கலாச்சாரத்தை கண்டு உணர்ந்தனர். இந்த பொங்கல் கொண்டாட்டம் சிறந்த கலாச்சார பரிமாற்ற நிகழ்வாக விளங்கியது.
SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களான பரத நாட்டியம், கிராமிய நடனம், பரை மேளம் நடனம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல், கயிரிழுத்தல், சிலம்பாட்டம், போன்ற விளையாட்டுகளையும் நிகழ்த்தினர்.
மாவிலையாலும் தோரணங்களாலும் அலங்கரித்து, ஒரு உழவனின் குடிசையை மத்தியில் வைத்து புதியதாக அறுவடை செய்த மஞ்சள் கொத்து மற்றும் கரும்புகளின் இடையில் அலங்கரிக்கப்பட்ட புது மண் பானையில், புதிய அரிசியில் வெல்லம் மற்றும் மணமிக்க நெய் கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து பொங்கல் பொங்கிவர சூழ நின்ற அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் இட்டனர் . மதிய உணவாக சுவை மிக்க கண்களை கவர்ந்து ருசிக்கும் வண்ணம் பருப்புவடை, தேங்காய் துவையல், சர்க்கரை கிழங்கு பொரியல் , ஏழு காய்கள் இட்டு செய்த சுவை மிகுந்த கூட்டு சேமியா ஜவ்வரிசி பாயசம் மற்றும் பல உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் SRM IST பதிவாளர் Dr. N. Sethuraman , SRM உணவக மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் Dr. D. ANTONY ASHOKKUMAR மற்றும் SRM மேலாண்மை கல்லூரியின் Dean Dr. Ponniah அவர்களும் வந்திருந்த மாணவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்க்குளுக்கும் அன்பளிப்பு வழங்கி அவர்களை கௌரவித்து பொங்கல் வாழ்த்துக்களை கூறினார்.