புதன், 27 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:24 IST)

என்னை என்கவுண்டர் செய்வார்கள் என அஞ்சுகிறேன்.. இறப்புக்கு முன் ரவுடி விஷ்வா எழுதிய கடிதம்..!

ஸ்ரீபெரும்புதூர் ரவுடி விஷ்வா நேற்று என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் என்னை என்கவுண்டர் செய்வார்கள் என்று அஞ்சுகிறேன் என்று கடிதம் எழுதி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று ஸ்ரீபெரும்புதூர் ரவுடி விஷ்வா காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். 
 
அந்த கடிதத்தில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி என்னிடம் கையெழுத்து வாங்க வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்  என்னை போலி என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லும்படி பேசினார்கள் என்றும் எனவே என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன் என்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும்  உதவி ஆய்வாளரே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva