ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:38 IST)

கள்ளக்குறிச்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு!

sremathi parents
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தடவை அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரம் அல்லது கொலையோ காரணமில்லை என்று உறுதியாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையின்படி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்ற கோணத்தில் இந்த வழக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாய்றது.

மேலும்,’’ ஸ்ரீமதி மரணத்தின் பின்னணியில் பலாத்காரமும், இல்லை, கொலையும் இல்லை; இது தற்கொலை தான் எனவும், மாணவர்களைப் படிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவது தற்கொலைக்குத் தூண்டும் செயல் அல்ல ‘’ என உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகளை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.