திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 15 மே 2021 (23:12 IST)

இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு குழுக்கள்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமத்தில் உள்ள பசுமைகுடி தன்னார்வ அமைப்பினர் சீரிய முயற்சியில், ஏற்கனவே மரக்கன்றுகள் மற்றும் மரங்கள் நடப்பட்டன. இந்நிலையில் இளைஞர்களை ஊக்குவிக்க ஆங்காங்கே விளையாட்டு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, எதிர்கால நல்லுலகை கட்டமைக்கும் இளம் தலைமுறையினரை உருவாக்க நல்ல சுற்று சூழல் மிக அவசியம். அதே போல இளைஞர் நலன் சார்ந்த விஷயத்திற்கு விளையாட்டும் பிரதானம். தேக ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம். எனவே இளைஞர்கள் உடல்நலம் பேணும் முயற்சியில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்   """ தேக ஆரோக்கியம் தேச ஆரோக்கியம் """ என்ற முழக்கத்துடன் இதுவரை 3 ஊர்களில் கரப்பந்தாட்ட குழுவுக்கு கரப்பந்து மற்றும் வலை ஆகியவை வழங்கியுள்ளது.
 
1. வீரமலைப்பாளையம் 
2. வரவணை 
3. குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு வழங்கி இருந்தோம் என்கின்றனர் பசுமைகுடி தன்னார்வ அமைப்பினர்
 
தற்சமயம் 4 வது கிராமமாக வ. வேப்பங்குடியில் கரப்பந்தாட்ட குழு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.