செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (12:43 IST)

75வது சுதந்திர தினம்: 15 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்!

police
75வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கும், புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய 10 அதிகாரிகளுக்கும் என மொத்தம் 15 அதிகாரிகளுக்கு சிறப்ப் பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பு பதக்கம் பெற்ற அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:
 
 
பிரேம் ஆனந்த் சின்கா, சென்னை பெருநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு தெற்கு) 
 
க.அம்பேத்கார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (கடலூர் குற்றப்புலனாய்வுத் துறை தனிப்பிரிவு) 
 
சு.சிவராமன், சென்னை அடையாறு போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 
 
வை.பழனியாண்டி, மதுரை மாநகரம் மதிச்சியம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 
 
மா.குமார், செம்மஞ்சேரி போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
 
கோ.ஸ்டாலின், மதுரை மாநகர துணை போலீஸ் கமிஷனர் 
 
ச.கிருஷ்ணன், சேலம் மாநகர டி.எஸ்.பி. (ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை) 
 
மா.பிருந்தா, விழுப்புரம் மாவட்ட ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர் 
 
அ.பிரபா, நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் 
 
வீ.சீனிவாசன், சென்னை பெருநகர கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 
 
மா.சுமதி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
 
 சி.நாகலெட்சுமி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
 
 வெ.துளசிதாஸ், சென்னை பெருநகர பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 
 
ச.ல.பார்த்தசாரதி, சென்னை குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (ஒருங்கிணைந்த குற்ற அலகு-1) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 
 
கா.இளையராஜா, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்