தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
கோடை விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள் இதோ:
1. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6, 13 , 20 , 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
2. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7, 14 , 21 , 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்
3. நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16, 30 ஆகிய தேதிகளில் இரவு 11 .15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணங்களுக்கும் இந்த சிறப்பு ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Edited by Mahendran