1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (07:52 IST)

சென்னை திரும்புபவர்களுக்கு இன்னொரு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Train
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில், பொங்கல் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்ப வசதியாக, நேற்று தூத்துக்குடியில் இருந்து ஒரு சிறப்பு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஜனவரி 19 ஆம் தேதி மாலை 4:25க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலை 3:45 மணிக்கு தாம்பரம் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக ஒரு சிறப்பு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 18 ஆம் தேதி இரவு 10:45 மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்பும் இந்த ரயில், ஜனவரி 19 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் இந்த இரண்டு சிறப்பு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva