1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:28 IST)

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள்: தமிழக அரசு வெளியீடு

உக்ரைனில் வாழும் தமிழர்களுக்காக சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் சிறப்பு தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
044 28515288, 9600023645, 9940256444 ஆகிய மூன்று எண்களில் வாழும் தமிழர்கள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் https://www.nrtamils.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து தமிழக அரசின் உதவியைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.