1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (14:53 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை திருப்பி அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
நேற்று அவருடைய காவல் முடிவடைந்ததை அடுத்து நேரில் ஆஜர் செய்யப்பட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் மனு கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது 
 
அவசர வழக்காக இந்த ஜாமின் மனுவை விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். ஆனால் இந்த ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று அந்த ஜாமீன் மனுவை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran