தொடர்புடைய செய்திகள்
- மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை - கர்நாடக அமைச்சர்
- மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கடைசி ஆசைக்கு உதவிய ரஜினிகாந்த்
- பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை - மத்திய அமைச்சரின் திமிர் பேச்சு
- பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நோக்கி செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி
- கொலஸ்ட்ரால் பிரச்சனை: தவிர்க்க வேண்டிய உணவுகள்
விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி சேகர்: வெடித்து சிதறிய ஸ்பீக்கர்
எண்ணூரில் நடிகர் எஸ்.வி சேகர் விழா ஒன்றில் பேசியபோது ஸ்பீக்கர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எண்ணூரில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகரும், பாஜக கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர் வந்திருந்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசளித்தார்.
பின்னர் அவர் மைக்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஸ்பீக்கர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். பின் அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு எஸ்.வி.சேகர் தனது உரையை முடித்தார். இந்த திடீர் சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
அடுத்த கட்டுரையில்
