1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (21:33 IST)

2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது ? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

appavu
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் எப்போது என்பது குறித்து அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் எம்எல்ஏக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக அமைச்சர் பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் புதிய இருக்கை ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva