ஏப்ரல் 15 முதல் ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் நிலை என்ன? இந்திய ரயில்வே விளக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என்ற எண்ணத்தில் பலர் ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் ஏப்ரல் 15ம் தேதி முதல் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் திரும்பி விடலாம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளதால் நாளை முதல் ரயில்கள் இயங்க வாய்ப்பில்லை என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து முன் பதிவு செய்தவர்களின் நிலை என்ன ஆகும் என்பது குறித்து இந்தியன் ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது
ஏப்ரல் 15 முதல் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அவர்களுடைய பணம் திரும்ப தரப்படும் என்றும் அவர்கள் தங்கள் டிக்கெட்டுக்களை கேன்சல் செய்ய தேவையில்லை என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது
மேலும் பயணிகள் ரயில் எப்போது முதல் தொடங்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை தளர்த்தினால் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன