கன்னியாக்குமரி – புனே சிறப்பு ரயில் தொடக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கன்னியாக்குமரி – புனே இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக குறைவான அளவிலான ரயில் சேவைகளே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் இருந்து புனே செல்லும் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது கன்னியாக்குமரியில் தினசரி காலை 8.25க்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாக்குளம் வழியாக கோவை, ஈரோடு, சேலம் பயணித்து திருப்பதி, கடப்பா வழியாக புனே சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.