1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. south west monsoon starts in kerala

தொடங்கியது தென்மேற்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிவிட்டது. கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பிரியங்கா காந்தி பதவி விலகுகிறாரா? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..!