திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (12:04 IST)

மீண்டும் புறநகர் ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை புறநகர் ரயில்களில் மீண்டும் சுற்றுலா பயணச்சீட்டுகள் வழங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டத்தில் செயல்படும் புறநகர் ரயில்களில் விருப்பம்போல பயணிக்கும் சுற்றுலா பயணச்சீட்டுகள் முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில் சில காலம் முன்னதாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த பயணச்சீட்டு திட்டம் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் திருவள்ளூர் – சென்னை, எம்ஜிஆர் செண்ட்ரல் – கும்மிடிபூண்டி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களில் விருப்பம்போல பயணிக்க முடியும். இந்த பயணச்சீட்டுகளை ஒரு நாள், மூன்று நாட்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆகிய மூன்று வகைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.