ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (18:33 IST)

சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த ரூ.100 கோடி எங்கே? அதிர்ச்சி தகவல்

சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்த ரூபாய் 100 கோடி பணம் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை துறைமுகம் சென்னையில் கோயம்பேட்டில் உள்ள வங்கி ஒன்றின் கிளையில் ரூபாய் 100 கோடியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது 
 
செய்யப்பட்ட பணத்தை வங்கியில் உள்ள ஒரு சிலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 100 கோடி ரூபாயை யார் யார் மோசடி செய்தார்கள்? யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்? என்பது குறித்த விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் இந்த மோசடியை செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த 100 கோடி திடீரென காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது