1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (12:09 IST)

மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன்  அறிவுறுத்தளின்படி, மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ராஜா மாறன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் முகமது தாரிக், இந்து மகா சபா தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில், பேசியவர்கள் கூறியதாவது: 
 
திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், சிறு, குரு தொழில் செய்பவர்கள் மிகுந்த தொழில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ,பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது .
 
கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
 
பொதுமக்கள் வீதிகளில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என்றும்,குற்றம் சாட்டினர்.