1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (10:14 IST)

சுத்தமான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் சாலை மறியல்!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் கங்கா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று காவிரி குடிநீர் வழங்கப்பட்டது அதுவும் சுத்தமில்லாமல் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் திடீரென 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
அப்பொழுது மக்கள் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் சிறுவர் முதல் பெரியவர் வரை இப்பகுதியில் அதிகம் வசிக்கின்றனர் அசுத்தமான தண்ணீரை விடுவதால் பல்வேறு நோய்கள் வருவதாகவும் ஏற்க உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
போன்ற கோரிக்கைகளை  சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் ராமரை  முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை லாரின் மூலம் தண்ணீர் விடுகிறேன் என்ற உறுதியின் பேரில் பொதுமக்கள் கலந்து சென்றனர் இந்த சாலை மறியலால் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது.