ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (17:47 IST)

குடிநீர் மற்றும் பஸ் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில்  ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததாலும் சில மாதங்களாக பஸ் வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் அவதிப்படுவதாலும் இங்குள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொற்செல்வி கூடுதல் ஆணையர் லட்சுமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி மேற்பார்வையாளர் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் அதிகாரிகளுக்கும் கிராம பொதுமக்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்பொழுது ஆணையர் பொற்செல்வி நேற்று தான் இப்பகுதிக்கு வந்துள்ளேன் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுத்து உங்களுக்கு குடிநீர் இடைவிடாமல் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார்.
 
அது வரை லாரி மூலம்குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் அங்குள்ள கிராம மக்கள் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
 
பின்னர் நாச்சிகுளம்ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுவரை தாங்கள் பொறுத்துக் கொண்டீர்கள் துரித நடவடிக்கை அதிகாரிகள் எடுப்பதாக கூறியுள்ளனர் மற்றும் பஸ் வசதி குறித்த நேரத்தில் இயக்குவதற்கு சோழவந்தான் அரசு பஸ் டிப்போ அதிகாரிகள் கூறி உள்ளார்கள் என்றும் தெரிவித்தார் இதன் பேரில் உங்களுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாமல் தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று கூறியதன் பேரில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.
 
இதனைத் தொடர்ந்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஏட்டுகள் சுந்தரபாண்டியன் உக்கரபாண்டி உட்பட போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்