வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (15:33 IST)

நாளை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும் பேருந்துகள் எவை எவை?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்த நிலையில் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்துகள் எவை எவை என்பதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
நாளை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும். 
 
ஈசிஆர்  வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து கிளம்பும்
 
தென் மாவட்டங்களுக்கு செல்லும் மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் பொங்கல் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் 
 
கிளாம்பாக்கம் இருந்து தாம்பரத்திற்கு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும்  கிண்டிக்கு மூன்று நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் கோயம்பேட்டிற்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும்
 
இவ்வாறு அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran