1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (09:58 IST)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் சொர்க்கவாசல் திறப்பு: குவிந்த பக்தர்கள்..!

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
 
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
 
அதேபோல் வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது! 
 
 ஏற்கனவே ஸ்ரீரங்கம், திருப்பதி உள்பட பல பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது என்பதும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran