1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (10:37 IST)

விஜய்யுடன் நடிக்க ரொம்ப நாள் ஆசை..! கடைசி படத்திற்கு ரூட் போட்ட பாலிவுட் இளம் நடிகை!

Ananya Pandey

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனன்யா பாண்டே. இந்தியில் 80களில் பிரபல நடிகராக இருந்த சுங்கி பாண்டேவின் மகள்தான் அனன்யா. இந்தியில் காலி பீலி, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2, லைகர் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார் அனன்யா பாண்டே.

 

Ananya Pandey

அடிக்கடி வெளிநாடுகள் சுற்றுலா செல்லும் அனன்யா அங்கு பிகினி உடையில் நடத்தும் போட்டோஷூட்டுகளை காணவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தாலும் தென் இந்திய சினிமாக்களிலும் கால் பதிக்க வேண்டும் என அனன்யா பாண்டே விரும்புகிறார்.

இதற்காக சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. ஆனாலும் அனன்யா தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். லைகர் தோல்வியால் தென்னிந்திய சினிமா அதிர்ஷ்டம் அவருக்கு கைக்கூடாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது “தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன்” என யோசிக்காமல் உடனே பதில் சொன்னார்.

ஆனால் விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படம்தான் அவரது கடைசி படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தில் நடிக்க அனன்யா பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்து அவர் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K