புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:18 IST)

சோனியாவை சந்தித்த கார்த்தி சிதம்பரம் – பின்னணி என்ன ?

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் கார்த்திக் சிதம்பரம்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டதை அடுத்து இன்றுடன் அவரது காவல் இன்றுடன் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். இந்நிலையில் நேற்று முதன் முதலாக காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை திஹார் சிறைக்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் பேசியது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக சோனியா என்னை அழைத்தார். சிதம்பரத்துக்கு உறுதுணையாக காங்கிரஸ் நிற்கும் எனக் கூறியுள்ளார்.  இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் பலத்தைத் தருகிறது’ எனக் கூறியுள்ளார்.