புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (16:04 IST)

தலித் வாலிபர் எரித்து கொல்லப்பட்டதற்கு பாஜக தான் காரணம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் வாலிபர் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தலித் படுகொலைகள் இந்தியாவில் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் வசிக்கும் மோனு என்ற தலித் வாலிபர் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்டார். மோனு தன்னை விட உயர் ஜாதி என கூறப்படும் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இவ்வாறு தீ வைத்து எரித்து கொள்ளப்பட்டார் என கூறப்பட்டது. தன் மகன் உயிரோடு எரிக்கப்பட்டதை பற்றி கேள்விபட்ட மோனுவின் தாயார், அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து இறந்துபோனார்.

இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார். அதில், பாஜக ஆட்சியில், தொடர்ந்து தலித்துகள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல் என கண்டித்துள்ளார். மேலும் உத்திர பிரதேசத்தில் பெண்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் பாதுகாப்பாக இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வடமாநிலங்களின் பல பகுதிகளில் சிறுபான்மையினரும், தலித்துகளும் மத வாத தாக்குதலுக்கு உள்ளாவதாக பல செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் தற்போது மோனு என்ற தலித் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.