திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:04 IST)

ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லை, தாயின் உடலை வீல்சேரில் எடுத்து சென்ற மகன்!

wheel chair
ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லை, தாயின் உடலை வீல்சேரில் எடுத்து சென்ற மகன்!
இறந்த தாயின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லாததால் வீல்சேரில் தாயின் உடலை கொண்டு சென்ற மகன் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை அடுத்து அவரை உடல் தகனம் செய்ய மருத்துவமனையிலிருந்து தாயின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை பேசப்பட்டது
 
ஆனால் ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் அவரிடம் பணம் இல்லை என்பதால் வேறு வழியின்றி தாயின் உடலை துணியால் சுற்றி 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டிற்கு வீல்சேரில் தாயின் உடலை எடுத்துச் சென்றார்
 
சாலையில் தாயின் உடலை வீல்சேரில் அவரது மகன் எடுத்துச் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது