திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:25 IST)

உணவின் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா...?

உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் நம் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே உணவின் தன்மை அறிந்து சாப்பிட வேண்டும். மேலும் உணவு நமக்கு சக்தியையும் ஆற்றலையும் கொடுக்க வேண்டுமே தவிர உடல் பருமனை உண்டாக்க கூடாது.


ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும்.

கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்.