திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (09:19 IST)

போலிஸ் காரர் மகன் கொலை – அடுத்தடுத்து நடந்த இரண்டு மரணத்தால் தவிக்கும் தாய் !

மதுரை தல்லாக்குளம் பகுதியில் மறைந்த காவல்துறை அதிகாரியின் மகன் கோபால்சாமி என்ற வாலிபர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் அவரின் மனைவி வெங்கடேஸ்வரிக்கு மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க் வேலைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஸ்வரியும் அவரது மகன் கோபால்சாமியும் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை கோபால்சாமி சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் ‘சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்குக் காதல் திருமணம் செய்ய கோபால்சாமி உதவியதால், அதன் காரணமாக ஏற்பட்ட பகையால் கொல்லப்பட்டிருக்கலாம்’ எனத் தெரிகிறது. மேலும் கோபால்சாமி அந்த பகுதிகளில் நடக்கும் கார் திருட்டுகளைப் பற்றி துப்புக் கொடுத்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட விரோதத்தின் காரணத்தால் கூட கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.