திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (08:17 IST)

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; பிறகு கொலை – ஆசிட் ஊற்றி எரித்த கொடூரன் !

திருப்பூரில் தனது கள்ளக்காதலியோடு தனிமையில் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் ஆசிட் ஊற்றி எரித்துள்ளார் கொடுரன் ஒருவர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மகாலெட்சுமி எனும் பெண். இவர் அப்பகுதியில் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்கு மேஸ்திரியாக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து மகாலெட்சுமி சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். இதையடுத்துப் போலிசார் நடத்திய விசாரணையில் கருப்பசாமிதான் மகாலெட்சுமியைக் கொலை செய்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில் ‘மகாலெட்சுமி தன்னிடம் உறவை முறித்துக் கொண்டதால் கோபமானதாகவும், அதனால் அவரை பழிவாங்க சமாதானப்படுத்துவது பேசி தனியாக அழைத்து வந்து உடலுறவுக் கொண்டு, பின்னர் அவரைக் கொலை செய்து ஆசிட் ஊற்றி எரித்ததாகக் கூறியுள்ளார்.

மகாலெட்சுமியின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கருப்பசாமி மேல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.