வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (11:02 IST)

பேய் கூறியதால் தாயை கழுத்தறுத்து கொன்றேன் - வாலிபர் வாக்குமூலம்

கஞ்சா போதையில் தன்னுடைய தாயின் கழுத்தை மகனே அறுத்து கொன்ற விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை செங்குன்றம் நாரவாரிக்குப்பத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவரின் கணவர் வேனு கடந்த 20ம் தேதி இறந்துவிட்டார். இவருக்கு குமார்(55) மற்றும் முருகன்(40) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
இதில், முருகனுக்கு குடிப்பழக்கும், கஞ்சா பழக்கும் இருந்ததாக தெரிகிறது. இதனால், அவரின் இரு மனைவிகளும் அவரை விட்டு சென்றுவிட்டனர்.
 
இந்நிலையில், கடந்த நேற்று காலை லட்சுமிக்கு அவரின் மூத்த மகன் குமார் சாப்பாடு எடுத்து சென்றுள்ளார். அப்போது, அவர் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குமார் போலீசாரிடம் புகார் அளித்தார். 
 
விசாரணையில், நேற்று முன் தினம் இரவு லட்சுமியிடம், அவரின் இளைய மகன் முருகன் தகராறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், நேற்று முன் தினம் நள்ளிரவு தான் விட்டிற்கு சென்ற போது, அங்கு இருந்த பேய் ஒன்று, என் தாய் கொலை செய். அப்படி செய்தால்தான் விட்டிற்கு நல்லது எனக் கூறியதால், என் தாயின் கழுத்தை அறுத்துக்கொன்றேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
சம்பவத்தன்று அவர் கஞ்சா புகைத்திருந்ததால், அவருக்கு இப்படியெல்லாம் தோன்றியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
மேலும், செங்குன்றம், சோழாவரம், நாரவாரிக்குப்பம், புழல் ஏரிக்கரை, பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், லாரி ஒட்டுனர்கள் ஆகியோர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை மும்முரமாக நடைபெறுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.