திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (11:49 IST)

கவிதா கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனு: விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகளும் அவருடைய கட்சியின் முக்கிய பிரமுகரான கவிதா சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தனது கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னுடைய கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு ஒன்று தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

மேலும் கவிதா விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் அல்லது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கவிதா விசாரணை நீதிமன்றத்தில் தன்னுடைய கையை எதிர்த்து மனு தாக்கல் செய்வார் என்றும் அதனை அடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran