1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (13:31 IST)

கழகத்தை காக்க, கட்சி அலுவலகத்திற்கு வருக - சின்னமாவுக்கு அழைப்பு!!

சசிகலாவுக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஒபிஎஸ், இபிஎஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில் அதிமுகவில் யார் தலைமை என பிரச்னை உச்சத்தில் இருகிறது. 
 
இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே, கழகத்தை காத்திட எங்களை வழி நடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக என வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.