1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sivasankar baba case cancel by chennai highcourt

சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Sivasankar Baba
சிவசங்கர் பாபா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் 
 
இந்தநிலையில் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
 
பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர் உடனடியாக புகார் அளிக்கவில்லை.  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன காலதாமதத்தை ஏற்கக்கூடிய எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் சட்டப்படி இந்த வழக்கை விசாரிக்க தடை இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்னும் சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!