1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (16:53 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

rain
இன்னும் சில மணி நேரங்களில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் தோன்றியுள்ளது அடுத்து மேலும் கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் பின்வரும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்யும் மாவட்டங்கள் இதோ: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனழை பெய்யவாய்ப்புள்ளது.
 
 அதேபோல் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran